கல்முனை கல்வி வலயத்தின் காரைதீவு கோட்டப் பாடசாலைகளில் அதிபர்களாக சேவையாற்றி ஓய்வு பெற்ற மற்றும் இடமாற்றலாகிச் சென்ற அதிபர்களின் சேவையைப் பாராட்டுமுகமாக, காரைதீவு கோட்ட அதிபர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சேவை நலன் பாராட்டு விழா காரைதீவு இராமகிருஷ்ண மிசன் பெண்கள் பாடசாலையில் அதிபர் எம் மணிமாறன் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ் சஹ்துல் நஜீம் அவர்களும், கெளரவ அதிதிகளாக வலயக் கல்வி அலுவலக கணக்காளர் வை. ஹபீபுள்ளாஹ் அவர்களும், காரைதீவு கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஜே.டேவிட் அவர்களும் கலந்து கொண்டனர்.
சேவை நலன் பாராட்டுப் பெறும் அதிதிகளாக மாளிகைக்காடு கமு/கமு/அல்- ஹுசைன் வித்தியாலயத்தில் 30 வருடங்களுக்கு மேலாக அதிபராக கடமையாற்றி அண்மையில் ஓய்வு பெற்ற ஏ.எல்.எம்.ஏ நளீர் மற்றும் இடமாற்றலாகிச் சென்ற மாவடிப்பள்ளி கமு/கமு/அல்-அஸ்ரப் மகா வித்தியாலய முன்னாள் அதிபர் எச்.எம்.எம். அனீஸ், காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபர் வீ.சந்திரேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் காரைதீவுக் கோட்டப் பாடசாலைகளின் தரம் பெற்ற அதிபர்கள் மற்றும் பிரதி அதிபர்கள் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment