அஸ்ஹர் இப்றாஹிம்-
சம்மாந்துறை பிரதேசத்திலுள்ள அனேகமான ஆறுகளிலும் குளங்களிலும் வாய்க்கால்களிலும் ஆற்றுவாழைகளின் அதீத பெருக்கத்தினால் வயல் நிலங்களுக்கு நீர் பாய்ச்சுவதில் பாரிய சிக்கல் நிலை தோன்றியுள்ளதாக விவசாயிகள் விஷனம் தெரிவிக்கின்றனர்.
தற்போது அதிகமான வயல்நிலங்களில் பெரும்போக நெற்செய்கைக்கான உழும் வேலைகளும்,விதைப்பு வேலைகளும் மும்முரமாக இடம்பெறுகையில் சில வயல் நிலங்களுக்கு நீர் பாய்ச்ச முடியாத நிலமை தோன்றியுள்ளது.
ஆற்றிலிருந்து வயல் நிலங்களுக்கு நீர்ப்பாய்ச்சும் பகுதியில் நீர்களைகள் வளர்ந்து காணப்படுவதால் நீர்ப்பாய்ச்சும் வேகம் குறைந்துள்ளதாகவும் இதனால் விதைப்பு வேலைகள் தாமதமடைவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர் ்
0 comments :
Post a Comment