அஸ்ஹர்இப்றாஹிம்-
நிந்தவூர் அல்-அஸ்றக் ஜுனியர் பாடசாலையில் மிக நீண்ட காலமாக ஆசிரியப் பணியாற்றிய எம்.ஏ.எம்.சர்ஜுன்(ஆங்கிலப் பாட ஆசிரியர்), திருமதி.ஏ.எப்.சௌஸானா(ஆரம்பப் பிரிவு ஆசிரியை), சிறிது காலம் பிரதி அதிபர், பகுதித் தலைவர் ,ஒழுக்காற்றுக்குழு தலைவர், பாடசாலை அபிவிருத்திக்குழு பொருளாளர் என பாடசாலையின் பல்வேறு அபிவிருத்திப் பணிகளில் பங்களிப்புச் செய்த ஏ.எல்.ஏ.றபீக் ஆகியோர் அண்மையில் வேறுபாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றதைத் தொடர்ந்து அவர்களுக்கான சேவைநலன் பாராட்டு வைபவம் பாடசாலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
0 comments :
Post a Comment