அஸ்ஹர் இப்றாஹிம்-
மாணவர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் வாசிப்பு மாதம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் அக்டோபர் வாசிப்பு மாதத்தை முன்னிட்டு மாவனல்லை ஆதார வைத்தியசாலையின் வாசிகசாலைக்கு ,மாவனல்லை வைத்திய சாலையின் அபிவிருத்தி சங்க உறுப்பினர்களுள் ஒருவரான ரிஸ்வான் தாஹீர் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஒரு தொகுதி நூல்கள் அன்பளிப்பு செய்யப்பட்டன.
பதுரியா மத்திய கல்லூரி யின் பழைய மாணவியர் சங்கத்தின் செயலாளர் டாக்டர் எம். ஜே. எப். யமீனா அவர்களின் தலைமையிலான குழுவினர் வைத்திய சாலையின் சிறுவர் பிரிவு தலைமை பொறுப்பாளர் வைத்தியர் இனோக்கா ஹலன்கொட,தலைமை தாதி எஸ். கே.விஜேசிங்க ஆகியோரிடம் இத் தொகுதி நூல்கள் கையளிப்பட்டன.
0 comments :
Post a Comment