நூருல் ஹுதா உமர்-
USF ஸ்ரீலங்கா அமைப்பினால் இன்று மாளிகைக்காடு மஸ்ஜிதுல் ஸாலிஹீன் ஜூம்மா பள்ளிவாசலில் ஆண்களுக்கான ஜனாஸா குளிப்பாட்டல் மற்றும் கபனிடல் தொடர்பான விளக்கமும் பயிற்சியும் மௌலவி ஏ.எம். நவாஸ் அவர்களினால் வழங்கப்பட்டது.
USF ஸ்ரீலங்கா அமைப்பின் தலைவர் அன்வர் அப்துல் கபூர் தலைமையில் நடைபெற்ற இந்த முதற்கட்ட நிகழ்வானது வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டதுடன் பெண்களுக்கான ஜனாஸா குளிப்பாட்டல் மற்றும் கபனிடல் முறையும் USF ஸ்ரீலங்கா செயற்பாட்டாளர்களால் மிக விரைவில் நடாத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஜனாஸா குளிப்பாட்டல் மற்றும் கபனிடல் தொடர்பான விளக்க பயிற்சியில் USF ஸ்ரீலங்கா நிர்வாகிகள், ஊர் மக்கள் எனபலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment