அரசு ஊழியரகளுக்கு வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு 10,000 ரூபாவினால் அதிகரிப்பு!



2024 வரவு செலவு திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களின் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு 10,000 ரூபாவினால் அதிரிக்கப்பட்டு, அக் கொடுப்பனவு 17,800 ரூபாவாக உயர்த்தப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (13) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இம்முறை வரவு செலவு திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்க முன்மொழியப்பட்டுள்ளது. தற்போது 7800 ரூபாவாக வழங்கப்படும் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு 2024ஆம் ஆண்டில் 10,000 ரூபா அதிகரித்து 17800 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆத்துடன், ஓய்வுபெற்ற அரச ஊழியர்களின் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு ஏப்ரல் மாதம் முதல் 2500 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தடம் புரண்டிருந்த இலங்கையின் பொருளாதாரத்தை கடந்த வருடத்தில் மீண்டும் பாதைக்கு கொண்டுவர முடிந்ததாகவும், அதற்காக மக்கள் கடுமையாக உழைத்த போதும், அதனை பின்னோக்கி இழுக்கவும் சிலர் முயன்றனர் என்றும் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :