இந்த மாநாட்டில் 500 ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டில் ஓமன் நாட்டின் நான்கு மூத்த அமைச்சர்களும் பங்கு கொள்கிறார்கள். தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் துறை, மீன்வளத்துறை, வேளாண்மை துறை, சுற்றுலா வளர்ச்சித்துறை அமைச்சர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.
இந்த மாநாடு தமிழ் ஏற்றுமதி, இறக்குமதியாளர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பாக அமையும். கத்தார், சவுதி அரேபியா, குவைத், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் இருந்தும் தொழில் அதிபர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த மாநாடு நடை பெறுவதன் மூலமாக உலக முதலீட்டாளர்கள் இதை பயன்படுத்திக்கொள்ள முடியும். ஓமன் நாட்டை மையமாக கொண்டு மீன் பிடித்தல், மீன் பதப்படுத்துதல், மீன் சார்ந்த மதிப்பு கூட்டு பொருள்கள் ஆகியவற்றிற்கும் மிகப்பெரிய வாய்ப்பு இருக்கிறது. ஓமன் நாட்டில் தொழில் நிறுவனங்கள் தொடங்குவது மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது. ஓமன் நாட்டில் தொழில் தொடங்க வருபவர்களுக்கு நிதி நிறுவனங்கள் எளிதாக கடன் வழங்குவதற்கு தயாராக இருக்கின்றன. இந்த மாநாடு ஓமன்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக அமையும் என அமைப்பின் இயக்குனர் ஜகத் கஸ்பர் கூறினார்.
0 comments :
Post a Comment