மலையகத் தமிழரின் 200 வருடகால வரலாற்றினை நினைவு கூரும் கண்காட்சி இன்று நவம்பர் (2ம்), நாளை (3ம்) திகதிகளில் காலை 9.00 மணி தொடக்கம் பி.ப 5.30 வரை கல்முனை நகரிலுள்ள கிரிஸ்டா மண்டபத்தில் சமூக அபிவிருத்தி நிறுவக பிராந்திய இணைப்பாளர் எம். எஸ். ஜலில் தலைமையில் நடைபெறுகிறது.
இலங்கை மலையகத் தமிழரின் 200 வருடகான பாரம்பரியத்தை நினைவு கூரும் இந் நிகழ்வினை சமூக அபிவிருத்தி நிறுவகம் (ISD) மற்றும் அம்பாறை மாவட்ட உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஒன்றியம் (TRF) ஆகியன இணைந்து நடாத்துகிறது. இக் கண்காட்சி நிகழ்வில் மலையக தமிழரின் வரலாற்று ஆவணங்கள், பொருளாதார, கலை, கலாச்சார, அரசியல் மற்றும் சமூகவியல் தொடர்பான விடயங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்ட உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஒன்றிய இணைப்பாளர் எம்.ஐ. றியாழ் அவர்களின் நெறிப்படுத்தலில் இடம்பெறும் இந்நிகழ்வின் ஆரம்ப நாள் நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்கரம பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், சமூக அபிவிருத்தி நிறுவக நிறைவேற்றுப் பணிப்பாளர் பி.முத்துலிங்கம், நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எல்.எம். லத்திப், அட்டாளைச்சேனை கல்வியற்கல்லூரி பீடாதிபதி ஆகியோர் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டனர். மேலும் சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் (ISD) திட்ட முகாமையாளர் திரு. ஜனார்த்தன், கல்வி திணைக்கள அதிகாரிகள், சுகாதாரதுறை அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவனத்தின் மாவட்ட இணைப்பாளர், சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் TRF முக்கியஸ்தர்கள், பாடசாலைகளின் அதிபர், ஆசிரியர்கள், அரச உத்தியோகத்தர்கள், அட்டாச்சோனை கல்வியல் கல்லூரி பயிலுனர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், கிராமமட்ட அமைப்புகளின் முக்கியஸ்தர்கள் மற்றும் அங்கத்தவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வானது மலையக தமிழ் மக்களின் வாழ்க்கை வரலாற்றினை பிரதிபலிக்கும் ஓர் நிகழ்வாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment