கிராம உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்யாமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குழு அறிக்கை கிடைத்தவுடன் கிராம உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வரவு செலவுத் திட்ட தலைப்புகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்...
கிராம அலுவலர் போட்டிப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 02ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதனூடாக 2038 புதிய கிராம அலுவலர் நியமனங்கள் வழங்கப்பட உள்ளன. அதற்குள் குழப்பத்தை ஏற்படுத்தி; இந்த நியமனங்கள் வழங்கப்படுவதை நிறுத்த முயற்சிக்க வேண்டாம். கிராம உத்தியோகத்தர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பிலும் குழு அறிக்கை கோரப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment