சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் 22 மாணவர்கள் சித்தி.


எம்.ஏ.ஏ.அக்தார்-

சா
ய்ந்தமருது முஸ்லிம் கலவன் பாடசாலையில் (ஜீ.எம்.எம்.எஸ்) பாடசாலையில் வெளியிடப்பட்ட ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் படி வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் 22 மாணவர்கள் பெற்றதோடு 92% சித்தியையும் பெற்று சுமார் 21 வருட சாதனையை முறியடித்துள்ளனர்.

06.08.2021 இலிருந்து இப்பாடசாலையின் அதிபராகக் கடைமையேற்ற எம்.ஐ.எம்.இல்லியாஸ் அவர்கள் தொடர்ச்சியாக 16,19 மற்றும் 22 என மாணவர்களை வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற பாடுபடுகின்றமையை பாராட்டி பாடசாலை நிறைவேற்று அபிவிருத்திக் குழு மற்றும் பெற்றோர்களால் கெளரவிக்கப்பட்டார்.

அத்தோடு உதவி அதிபர் எம்.ஏ.ஸி.எல்.நஜீம், பகுதித்தலைவர், வகுப்பாசியர்கள் கெளரவிக்கப்பட்டதோடு 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்கள் அனைவரும் பாராட்டப்பட்டனர்.

மேலும் வெட்டுப்புள்ளியை விட அதிக புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் விஷேடமாக பாராட்டப்பட்டு கெளரவிக்கப்பட்டனர்.

இன்றைய விஷேட அம்சமாக பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட "கேக்" வெட்டப்பட்டு மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் பாடசாலை அபிவிருத்திக் குழுவின் செயலாளர் பொறியியலாளர் எம்.ஐ.எம்.றியாஸ் உறுப்பினர்களான ஏ.பி.முஜீன், எம்.ஸி.எம். ஹஸீர், இஸட்.எம். அஸ்மீர்,ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பெற்றோர்களெனப் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :