25வது வெள்ளி விழா தேசிய கொடகே தேசிய சாகித்திய விழா 2023



25வது வெள்ளி விழா தேசிய கொடகே தேசிய சாகித்திய விழா 2023 கடந்த நவம்பர்-15 அன்று பிற்பகல் 2.30 மணிக்கு கொழும்பு-7யில் அமைந்துள்ள தேசிய நூலக சேவைகள் சபை கேட்போர் கூடத்தில் திருமதி நந்தா கொடகே தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த சிங்கள- தமிழ் ஆங்கில நூல்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. தமிழுக்கான விருதுகளாக 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த நாவலுக்கான விருது ஏ.எஸ் உபைதுல்லாவின் வேராகிப் போன மனிதர்கள் எனும் நாவலுக்கும், சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான விருது மண்டூர் அசோகாவின் எழுதப்படாத கவிதைகள் சிறுகதைத் தொகுப்புக்கும், சிறந்த கவிதைத்தொகுக்கான விருது சிவனு மனோஹரனின் மலைகளின் பாடல் எனும் கவிதைத் தொகுப்புக்கும்,. சிறந்த முதல் நூலுக்கான விருது ஜெயவதியின் அணங்கே ; அகிலம் வெல் எனும் கவிதைத் தொகுப்புக்கும், சிறந்த மொழிபெயர்ப்பு தொகுப்புக்கான விருது இப்னு அசூமத்தின் நீ கூறுகிறாய் இறந்து விட்டாயாம் நீ எனும் தொகுப்புக்கும், 2022 ஆண்டுக்குக் கொடகே ஆக்க இலக்கியப் போட்டியில் சிறந்த கவிதைத் தொகுப்பாகத் தெரிவு செய்யப்பட்ட தினுஷா மகாலிங்கத்தின் சொற்களற்ற இடைவெளி எனும் கவிதைத் தொகுப்புக்கும், சிறந்த சிறுகதைத் தொகுப்புப்பாகத் தெரிவு செய்யப்பட்ட ஜே. வஹாப்தீனின் அவனுக்கும் சிறகுகள் உண்டு எனும் சிறுகதைத் தொகுப்புக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

இவ்விருதுகளை இலக்கியப் புரவலர் ஹாஸிம் உமர் வழங்கி வைத்தார். விருதுகளுக்கான அறிவிப்புகளை மும்மொழியிலும் ஹேமமாலி ஹேமசந்திர பதிரன, மேமன்கவி ஆகியோர் முன் வைத்தார்கள்.












இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :