தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அம்பாறை மாவட்டத்தினது 34ஆவது இளைஞர் விளையாட்டுப் போட்டி அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில்.


நூருல் ஹுதா உமர்-

ளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அம்பாறை மாவட்டத்தினது 34ஆவது மாவட்ட மட்ட இளைஞர் விளையாட்டுப் போட்டி அம்பாறை மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தர் முபாரக் அலி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை இம் மாதம் 05ம் திகதி காலை 08.00 மணி தொடக்கம் மாலை 06.00 மணிவரை சுவட்டு மைதான நிகழ்ச்சிகளாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிகழ்வானது அம்பாறை மாவட்டத்தில் காணப்படும் 20 பிரதேச செயலகங்களில் நடத்தப்பட்ட பிரதேச மட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்ற விளையாட்டு வீர, வீராங்கனைகளின் பங்கேற்புடன் அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெறும்.

மேலும் இப்போட்டியில் வெற்றி பெற்று, முதலாம் இடங்களைப் பெறும் இளைஞர் விளையாட்டு வீர, வீராங்கனைகள் 34வது தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளவுளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :