கல்முனை சாஹிராவின் 74 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டும் 75 வருட பவளவிழாவையொட்டியும் வருடம் முழுவதும் திட்டமிடப்பட்டுள்ள நிகழ்வுகள் தொடர்பில் ஊடாகங்களுக்கு தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பும் பவளவிழாவை முன்னிட்டு உத்திக பூர்வ இலச்சினை அறிமுக விழாவும் பாடசாலையின் முதல்வர் எம்.ஐ.ஜாபிர் அவர்களது தலைமையில் இடம்பெற்றது.
முதல்வர் அவர்களால் பாடசாலையின் தோற்றம் அதற்காக தியாகங்கள் செய்த நபர்கள் மற்றும் அடைவுகள் தொடர்பில் விரிவாக விளக்கமளித்த அதேவேளை பவளவிழாவை பாடசாலையின் உட்கட்டமைப்பு மற்றும் கல்வி மேன்பாட்டுக்கு எவ்வாறு பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்ற விடயங்களை எடுத்துக்கூறினார்.
இங்கு கருத்துத் தெரிவித்த பாடசாலையின் அபிவிருத்திக் குழுவின் செயலாளர் டொக்டர் சனூஸ் காரியப்பர் அவர்கள், சாஹிராவில் கற்றவர்களும் நலன்விரும்பிகளும் சாஹிரா தாயின் முன்னேற்றத்துக்கு கைகோர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் எம்.என்.எம். தில்ஷான் கருத்துத் தெரிவிக்கும்போது பவளவிழா கொண்டாட்டம் என்பதை விட பாடசாலை மற்றும் கல்வி மேம்பாட்டுக்காக அனைவரும் ஒன்றுதிரள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
0 comments :
Post a Comment