சுற்றுலா பயணிகளால் களைகட்டும் கன்னியா வெந்நீர் ஊற்று.


வி.ரி.சகாதேவராஜா-

டந்த நான்கு நாட்கள் பாடசாலை விடுமுறை விடப்பட்டிருந்த காரணமாக திருகோணமலையிலுள்ள கன்னியா வெந்நீர் ஊற்று சுற்றுலா பயணிகளால் களை கட்டிவருகிறது.

தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் அங்கு சென்று வெந்நீர் நீராடலில் ஈடுபட்டு வருகின்றார்கள் .

கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலை 91/92 அணியினரும் அந்த நீராடலில் கலந்து கொண்டு மகிழ்ந்து திளைத்தார்கள் .

இராவணன் தனது தாயாருக்காக பிதிர்க்கடன் செலுத்த இதனை விரல்களை ஊன்றி ஏழு இடங்களில் ஏழு வெந்நீர் ஊற்றுகளை உருவாக்கியதால் வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது.

காலை 7 மணி அளவில் அங்கு பிரதான வாயில் திறக்கப்படுகிறது .
அந்த நிமிடத்தில் இருந்து தொடர்ந்து சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கில் பயணம் செய்து அங்கு தொல் பொருள் திணைக்கள அலுவலகத்தில் 50 ரூபாய்( உள்ளூர் பயணிகள்) செலுத்தி அனுமதிச் சீட்டு பெற்று நீராடி மகிழ்ந்து வருகின்றார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :