நடைபவனி மூலம் கொழும்பை வந்தடைந்தார் அகுரஸ்ஸ பாலகுமார் சுப்ரமணியம்!





அஷ்ரப் ஏ சமத்-
லக சாதனை படைக்க இருக்கும் பாலகுமார் சுப்ரமணியம்,வயது 50, அகுரஸ்ஸ மாதரை "பரதுவ" தோட்டத்தில் தேயிலை தோட்ட தொழிலாளி நடைபவனி மூலம் அகுரஸ்ஸ மாத்தரையிலிருநது 3190 கி.மீட்டார் நடப்பதற்காக 2023.09.25 அக்குரஸ்ஸையில் நடக்க ஆரம்பித்தார்.

இவர் ஹம்பாந்தோட்டை மொனராகலை, அம்பாறை , மட்டக்களப்பு, வவுனியா, யாழ்ப்பாணம் வழியாக மீள இன்று கொழும்பை வந்தடைந்தார். இவரை கொழும்பு செட்டியார் தெருவில் மலைய கல்வி அபிவிருத்தி மன்ற உறுப்பினர்கள் வரவேற்று. அவரை பாராட்டி மாலையிட்டு பொன்னாடை போற்றி கௌவரவித்து அவரது உலக சாதனைக்கு வாழ்த்துக்களையும் தெரிவிததனார். அத்துடன் அவருக்கு உதவிகளையும் வழங்கி வைத்தனர்.

அவர் மீண்டும் இன்று காலிமுகத்திடலில் இருந்து களுத்துறை சென்றடைவார். அத்துடன் அடுத்த 5 நாட்களுக்குள் மாத்தரை அக்குரசை அடைந்ததும். அவர் நடைபவனை சாதனை முடிவடையும் அத்துடன அவருக்கு உட்சாக ஊட்டி இத்தி்ட்டத்தினை ஆரம்பித்து வைத்த பொலிஸார் மற்றும் அவரது பிரதேச மக்கள் மற்றும் நிறுவனங்கள் வரவேற்பார்கள். அத்துடன் உலக சாதனை கின்னஸ் புததகத்தில் இவர் நடைபயிலும் சம்பந்தப்பட்ட பிரதேசங்களில் பொலிஸ் அதிகாரிகள் பரிசிலித்து கையொப்பமிட்டுள்ளனர் அதன் பிறகு உலக சாதனை கின்னஸ் நிறுவனத்திற்கு தான் அறிவிப்பதாகவும் கூறுகின்றார்.

இத் நடைபயிலும் திட்டத்தினை இலங்கையில் கடந்த காலத்தில் 1987 கி மீட்டர் துாரமே உள்ளது. அமெரிக்காவில் ஒருவர் 2300 உள்ளது. எனது குறிக்கோள் 3180 கி.மீட்டராகும். தனது குடும்பம் கடந்த கால சுனாமியினால் இறந்து போனார்கள்.தான் தனிமையிலேயே வாழ்வதகாவும் தனக்கு குடியிருக்க வீடொன்றை நிர்மாணிக்க வேண்டும் எனவும அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார் .

இன்று பெலியா கொடையில் தொடங்கும் போது இதற்கு முன்னர் 47 நாட்களில் இதே போல் நடைபாவணி மூலம் சாதனை படைத்த முன்னாள் ராணுவத்தில் சேவை(வேலை) செய்த கங்கரதாஸ் வரவேற்கிறார் பாலகுமாருடன் இவரும் இணைந்து பாலத்துறை ,கிறேண்ட்பாஸ் ,ஆம்ர்வீதி, ஜெம்பட்டா வீதி ,செட்டியார் தெரு, புறக்கோட்டை ,கோட்டை லேக் ஹவுஸ் வீதியாக காலி முகத்தில் இருக்கும் பண்டா நாயக்க சிலைக்கு அருகில் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க இருக்கின்றார். உலக சாதனை படைக்க இருக்கும் பாலக்குமார் சுப்ரமணியம் இவர்களுடைய பேச்சுவார்த்தை முடிந்தவுடன் (கோல்ட்பீஸ்) காலி முகத்திடத்திலிருந்து இருந்து மீண்டும் அகுரஸ்ஸையை நோக்கி நடைபவனே தொடர்வார்

காலிமுகத்திடலில் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பனர் வீரசுமன வீரசேகர மற்றும் குருநாகல் பாலாளுமனற உறுப்பிணர் அசங்க நவரததினவும் இணைந்து பாராட்டி கொளரவித்தனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :