அஸ்ஹர் இப்றாஹிம்-
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் அவர்களின் வழிகாட்டலில் கல்முனை பிராந்திய தொற்று நோய் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஏ.ஸி.எம்.பஸால் அவர்களினால் கல்முனை பிராந்தியத்தில் கடமையாற்றும் நுளம்பு கட்டுப்பாட்டு கள உதவியாளர்களுக்கு டெங்கு பூச்சியல் தொடர்பான பயிற்சி கருத்தரங்கு காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் (4) நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் வளவாளர்களாக தொற்று நோய்த்தடுப்பு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர்.எம்.ஏ.ஸி.எம்.பஸால் மற்றும் மேற்பார்வை பூச்சியியல் உத்தியோகத்தர் கே.ஏ. ஹமீட் அவர்களும் கலந்து கொண்டார்கள்.
விசேடமாக இந் நிகழ்வில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் தஸ்லீமா பஸீர் , மாவட்ட பொது சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம்.லபீர், சுகாதார பூச்சியல் உத்தியோகத்தர் எஸ்.ரீ. பிர்தௌஸ் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment