இஸ்ரேலின் மனிதபிமானமற்ற போரை நிறுத்த ஐ.நா நடவடிக்கை எடுக்க கோரி கொழும்பிலுள்ள ஐ. நா காரியலயத்தில் மகஜர் கையளிப்பு.


நூருல் ஹுதா உமர்-

லஸ்தீன், காஸாவில் மனிதாபிமானமாற்ற முறையில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் மனித படுகொலையையும், கொடுர தாக்குதல்களையும் உடனடியாக நிறுத்த ஐ.நா பாதுகாப்பு சபை தலையிட வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் 160 க்கு மேற்பட்டோரின் கையெழுத்துடன் தயாரிக்கப்பட்ட மகஜர் இன்று காலை கொழும்பில் அமைந்துள்ள ஐ. நா அலுவலகத்தில் கையளிக்கப்பட உள்ளது.

இந்த மகஜரை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் சட்டதரணி எச்.எம்.எம். ஹரீஸ், அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இசாக் ரஹ்மான் ஆகியோர் இன்று காலை கொழும்பில் அமைந்துள்ள ஐ. நா அலுவலகத்தில் வைத்து ஐ.நா அதிகாரிகளிடம் கையளிக்கவுள்ளனர்.

இஸ்ரேல் பலஸ்தீனத்தில் மனிதாபிமானமில்லாத வகையில் முன்னெடுத்து வரும் மனித படுகொலையையும், கொடுர தாக்குதல்களையும் உடனடியாக நிறுத்த ஐ.நா பாதுகாப்பு சபை தலையிட வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்துள்ள இந்த மகஜரில் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிரிசேன, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உட்பட கட்சி தலைவர்கள், முன்னாள், இந்நாள் அமைச்சர்கள், சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் எனபலரும் கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :