பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பொருள் பாவனையின் பக்கம் ஈர்க்கும் செயற்பாடுகளில் இருந்து பிள்ளைகளை பாதுகாக்க வேண்டியது பெற்றோரின் பாரிய கடமைப்பாடாகும்.
கல்முனையில் முன்னாள் கல்முனை மாநகர மேயரும், மெற்றோபொலிடன் கல்லூரி தவிசாளருமான கலாநிதி ஸிராஸ் மீராசாஹிப்
சாய்ந்தமருது ரோயல் கல்வி நிறுவனத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா சாய்ந்தமருது லீமெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்ட கல்முனை மாநகர சபை முன்னாள் மேயரும்,மெற்றோபொலிடன் கல்லூரியின் தவிசாளருமான கலாநிதி ஸிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார்.
போதைப்பொருள் பாவனையும்,விற்பனையும் எமது பிரதேசங்களில் மட்டுமல்ல எல்லா பிரதேசங்களிலும் இடம்பெற்று வருகின்றன. இத்திட்டத்தில் இன்றைய இளைஞர்களும், சிறுவர்களும் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகி விடுகின்றார்கள். அதிலிருந்து எமது பிள்ளைகளை பாதுகாத்துக் கொள்ளும் பாரிய பொறுப்பு பெற்றோர்களாகி உங்களிடமே உள்ளது .உங்களுக்கு பிள்ளை வீட்டிலிருந்து வெளியில் சென்று மீண்டும் வீடு திரும்பும் வரை அவர்களை கண்காணியுங்கள். அவர்களின் நடவடிக்கைகளில் வித்தியாசம் அல்லது சந்தேகம் ஏற்படும் போது அவர்களை விசாரியுங்கள். பாடசாலை செல்லும் நேரம் தவிர மற்றைய நேரங்களல்பி செல்லுமிடம், அவர்கள் பழகும் நண்பர்கள் பற்றி நன்கு அறிந்து கொள்ளுங்கள். பிள்ளைகளுக்கு சரியான வழிகாட்டுதல்களை வழங்குங்கள். சாதாரண தரம் அல்லது உயர் தரம் சித்தியடையவில்லை என்றால் கவலைப்படாதீர்கள். அதற்கேற்றவாறு அவர்களை பயிற்றுவித்து டிப்ளோமா தொடக்கம் கலாநிதி வரை செல்லக்கூடிய கல்வியை வழங்கக்கூடிய அரச அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் எமது பிரதேசம் முதல் தலைநகர் வரை உள்ளது. அவற்றில் உங்கள் பிள்ளைகளை கற்கவைத்து அதன் மூலம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நல்ல தொழில் வாய்ப்பினைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பினை ஏஏற்படுத்தக் கொடுங்கள். வறுமையை காரணம் காட்டி பிள்ளைகளின் கல்வியை மட்டும் இடை நிறுத்தி விட வேண்டாம் எவ்று தெரிவித்தார்..
0 comments :
Post a Comment