கல்முனை கல்வி வலயத்தில் நடைபெற்ற மாணவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மாநாடு .

நா
ட்டின் ஜனநாயகம், நல்லாட்சி, பாராளுமன்ற நடைமுறைகள், பாராளுமன்ற சட்டவாக்கம், தலைமைத்துவம் தொடர்பில் கல்முனை கல்வி வலய பாடசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான மாணவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மாநாடு அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் அனுசரணையுடன் கல்முனை வலயக்கல்வி அலுவலக ஏற்பாட்டில் இன்று சாய்ந்தமருதில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு உறுப்பினரும், அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் தவிசாளருமான யூ.எல்.என். ஹுதா உமரின் ஆரம்ப உரையுடன் ஆரம்பமான இந்த நிகழ்வில் கல்முனை வலயக்கல்வி அலுவலக பிரதிக்கல்வி பணிப்பாளர் எம்.எச். ஜாபீர் தலைமையுரை நிகழ்த்தினார். 

மேலும் பிரதான வளவாளராக இலங்கையின் முதலாவது முஸ்லிம்
அரசியல்துறை பேராசிரியரும், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கலைக்கலாசார பீடத்தின் பீடாதிபதியுமான பேராசிரியர் எம்.எம். பாஸில் கலந்து கொண்டு நாட்டின் ஜனநாயகம், நல்லாட்சி, பாராளுமன்ற நடைமுறைகள், பாராளுமன்ற சட்டவாக்கம், தலைமைத்துவம் தொடர்பில் விரிவுரை நிகழ்த்தினார்.

 இந்நிகழ்வில் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினரும்,உள்ளுராட்சி மாகாண சபைகள் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஸ்ரீ.ல.மு.கா. பிரதித்தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாகவும், வளவாளராகவும் கலந்துகொண்டு மாணவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராளுமன்ற நடைமுறைகள், சர்வதேச, தேசிய அரசியல் நடவடிக்கைகள், ஜனநாயகத்தின் பல்வேறு முகங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக கல்முனை வலயக்கல்வி அலுவலக பிரதிக்கல்வி பணிப்பாளர்கள், உதவிக்கல்வி பணிப்பாளர்கள், கணக்காளர் வை. ஹபிபுல்லாஹ், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரியும், கல்முனை மாநகர பிரதம சுகாதார வைத்திய அதிகாரியுமான டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்ஷத் காரியப்பர், கிழக்கு மாகாண அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளன செயற்குழு உறுப்பினரும், கிழக்கின் கேடயம் பிரதானியுமான எஸ்.எம். சபீஸ், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், சாய்ந்தமருது, கல்முனை கல்வி கோட்டங்களை சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவ பாராளுமன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :