திருக்கோவில் பிரதேச செயலகத்தின் கீழ் சமுர்த்தி பயனாளிகளுக்கு ஜயவிமன செயற்றிட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் உரிய பயனாளிகளுக்கு வழங்கிவைக்கப்பட்டன .
திருக்கோவில் பிரதேச சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.அரசரெட்ணம் தலைமையில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.
இவ் வீடுகள் தம்பிலுவில் ~01 மேற்கு மற்றும் விநாயகபுரம் ~1 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் ஜயவிமன செயற்றிட்டத்தின் கீழ் பூரணபடுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன்,
சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் ஆர்..புண்ணியசீலன்
தம்பிலுவில் சமுர்த்தி வங்கி முகாமையாளர் எஸ்.சதிஸ் மற்றும் பயனாளர்களின் பிரிவுகளுக்குரிய கிராம சேவை உத்தியோகத்தர்கள் ,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
0 comments :
Post a Comment