அஸ்ஹர் இப்றாஹிம்-
நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் செயற்பாடுகள் மக்களுக்கு பூரண திருப்தி அளிக்க கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைய பசுமைப் புரட்சி வேலைத்திட்டத்தின் கீழ் நிந்தவூர் மதீனா விளையாட்டு கழக உறுப்பினர்களின் பங்கு பற்றலோடு நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் மாபெரும் சிரமதான நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது
நிந்தவூர் ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியாசகர் டாக்டர் எம். பி. ஏ .வாஜித் தலைமையில் நடைபெற்ற இந்த சிரமதான நிகழ்வில் தாதிய மேற்பார்வை உத்தியோகத்தர்களான பி. எம் நசிருடீன், எம் .சி .எஸ். சமாஹிலா, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஏ. எம்.நியாஸ், வைத்தியசாலையின் நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தர் ஐ. எல். எம். றபீக் உட்பட வைத்திய அதிகாரிகள், தாதிய உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் நிந்தவூர் மதீனா விளையாட்டு கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
இதன் போது வைத்தியசாலையின் உட்புற வெளிப்புற சுற்றுச் சூழல்கள் அழகு படுத்தப்பட்டதுடன், வைத்தியசாலை வளாகம் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டது.
அண்மை காலமாக இவ் வைத்தியசாலை நோயாளர் நலன் உட்பட பல்வேறு வழிகளிலும் முன்னேற்றகரமான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது
0 comments :
Post a Comment