இஸ்ரேலக்கு எதிராக கண்டனப் பேரணி.


எஸ்.
எம்
.எம்.முர்ஷித்-

லஸ்தீன் காஸா மக்களுக்கெதிராக இஸ்ரேல் மேற்கொண்டு வரும் கொடூர தாக்குதலைக் கண்டித்தும் உயிரிழப்பு மற்றும் சொத்து அழிவுகளை சந்தித்து வரும் பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாகவும் இன்று வெள்ளிக்கிழமை (03.11.2023) ஜும் ஆத் தொழுகையைத் தொடர்ந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமும் பேரணியும் ஓட்டமாவடி பிரதான வீதி மணிக்கூட்டு கோபுர சந்தியில் இடம்பெற்றது.

அகில இலங்கை ஜம்யதுல் உலமா சபையின் கல்குடா கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்ட பேரணியில் கல்குடா தொகுதி முஸ்லீம் பிரதேசத்தில் உள்ள அனைத்து ஜும்ஆ பள்ளிவாயல்களில் இருந்தும் ஊர்வலமாக வந்த பொது மக்கள் ஓட்டமாவடி மணிக்கூட்டு கோபுர சந்தியில் ஒன்று கூடி தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

கல்குடா தொகுதி முஸ்லீம் பிரதேசங்களை சேர்ந்த பெருமளவிலான பொதுமக்கள் சமூக நிறுவனங்களின் பிரதி நிதிகள், பள்ளிவாயல்களின் நிருவாக சபையினர் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது, இஸ்ரேலின் கொடூரத்தாக்குதலைக் கண்டித்து பதாதைகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்பை வெளியிட்டதுடன், மனித உரிமை ஆணைக்குழுவுக்கு முகவரியிடப்பட்ட மகஜர் வாசிக்கப்பட்டு உரிய இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்காக ஓட்டமாவடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எஸ்.எம். அல் அமீனிடம் உலமா சபையின் பிரதிநிதிகளால் கையளிக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :