கல்முனை பிராந்தியத்துக்கான மருத்துவ ஆய்வுகூடம் திறந்துவைப்பு.


நூருல் ஹுதா உமர்-

ல்முனை பிராந்தியத்துக்கான மருத்துவ ஆய்வுகூடம் பாலமுனை பிரதேச வைத்தியசாலை கட்டிடத்தில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் தலைமையில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இத்திறப்பு விழா நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் பிரதம அதிதியாகவும், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் மெலிண்டன் கொஸ்தா கௌரவ அதிதியாகவும், முன்னாள் பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளரும், நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருமான டொக்டர் எம்.பீ.அப்துல் வாஜித் விசேட அதிதியாகவும் கலந்துகொண்டு ஆய்வுகூடத்தினை திறந்து வைத்தனர்.

இந்நிகழ்வில் பிராந்திய திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர், உயிரியல் மருத்துவ பொறியியலாளர் இப்ஹாம், பாலமுனை பிரதேச வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஜே.நௌபல், கல்முனை சுகாதார சேவைகள் பணிமனையின் பிரிவுத் தலைவர்கள், வைத்தியர்கள், பிராந்திய ஆய்வு கூட மேற்பார்வையாளர் ஏ எம் எம் சலீம், சுகாதார உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

மிகவும் குறைந்தளவிலான நிதியினைக்கொண்டும் பிராந்திய சுகாதார நிறுவனங்களில் உள்ள வளங்களைக் கொண்டும் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த பிராந்திய ஆய்வுகூடத்தில் பிராந்திய வைத்தியசாலைகளில் எடுக்கப்படுகின்ற நோயாளர்களின் குருதி மற்றும் மாதிரிகள் பரிசோதனை செய்யப்படவுள்ளதுடன், விசேட பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன. இங்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் முடிவு அறிக்கைகள் உரிய நேரத்துக்குள் சம்மந்தப்பட்டவர்களுக்கு Online (email, whatsapp) மற்றும் குறுஞ்செய்தி ஊடாகவும் அனுப்பி வைக்கப்படவுள்ளது. மேலும் இந்த ஆய்வுகூடத்தின் ஊடாக பிராந்திய மக்கள் பெரிதும் நன்மையடையவுள்ளனர்.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரச நிதி செலவீனங்களை குறைத்து கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்ட குறித்த வேலைத்திட்டம் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளினதும் வரவேற்பினைப் பெற்றுள்ளதுடன் அதனை செயற்படுத்துவதற்கான அங்கீகாரமும் கிடைத்துள்ளமை விசேட அம்சமாகும்.

இலங்கையில் முதலாவது பிராந்திய ஆய்வுகூடத்தினை கல்முனை பிராந்தியத்திலே திறந்து வைத்ததன் மூலம் தேசிய ரீதியில் கல்முனை சுகாதார சேவைகள் பணிமனை முக்கியத்துவம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :