ஆரம்பக் கல்வியில் ஒன்பதாவது இடத்தில் இருக்கும் கிழக்கு மாகாணத்தை மேல்நோக்கி கொண்டு வர அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் -சுஜாதா குலேந்திரகுமார்


வி.ரி.சகாதேவராஜா-

கி
ழக்கு மாகாணம் ஆரம்பக்கல்வியை பொறுத்தவரை ஒன்பதாவது நிலையில் இருக்கின்றது. அந்த நிலையிலிருந்து மேலே கொண்டு வர நீங்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் கல்முனை மற்றும் சம்மாந்துறை வலய ஆரம்பக் கல்வி தரம் நான்கில் கற்பிக்கும் ஆசிரியர்கள் முன்னிலையில் பேசும்போது குறிப்பிட்டார்.

இந்த அமர்வு கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம் எஸ் சஹுதுல் நஜீம் தலைமையில் நேற்று (8) புதன்கிழமை பிற்பகல் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியில் நடைபெற்றது .

அங்கு சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா சிறப்பதிதியாக கலந்து சிறப்பித்தார்.

கல்முனை கல்வி மாவட்டத்திற்கான ஆரம்பக்கல்வி இணைப்பாளரும் நாவிதன்வெளி கோட்டக் கல்விப் பணிப்பாளருமான பி.பரமதயாளன் காணொளி மூலம் சம்மாந்துறை கல்முனை வலயங்களின் ஆரம்ப கல்வி நிலைமைகள் தொடர்பான சமர்ப்பணத்தை சிறப்பாக செய்தார்.

அதனை தொடர்ந்து மாகாண கல்வி பணிப்பாளர் மேலும் பேசுகையில்.

கிழக்கு மாகாணம் கல்வியின் ஏனைய துறைகளில் முன்னணியில் இருப்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள் .ஆனால் ஆரம்பக்கல்வி ஒன்பதாவது நிலையில் இருப்பது கவலைக்குரியது.
மிகவும் திறமை வாய்ந்த ஆசிரியர்கள் அதிகாரிகள் இருக்கும் பொழுது இந்த நிலைமை தொடர அனுமதிக்க முடியாது.

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டு புள்ளிக்கு மேல் பெறுவதற்கு நாம் அனைவரும் படாதபாடு படுகின்றோம். ஆனால் 70 என்ற சித்தி புள்ளிக்கு மேல் அனைவரையும் பெற வைக்க வேண்டும் என்ற நோக்கத்திலிருந்து தவறிவிடுகின்றோம்.
இதுவே நாம் பின்னடைவதற்கு பிரதான காரணம்.

எனவே நாம் அனைவரும் ஒத்துழைத்து இந்த நிலைமையிலிருந்து மேலும் முன்னேற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம் எஸ் சஹுதுல் நஜீம் பேசுகையில்..

ஒன்பதாம் நிலையில் இருந்து எடுத்த எடுப்பிலேயே முதல் நிலைக்கு வர முடியாது. இருந்தாலும் ஐந்தாவது நிலையாவது வர அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா பேசுகையில் ;

புதிய மாகாண கல்வி பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் வந்ததும் எடுத்த பெரு முயற்சி இன்று செயல் உருவாக பரிணமிக்கிறது. ஆரம்பக் கல்வியை முன்னேற்ற வேண்டும் என்று கூறியதோடு மாத்திரம் இல்லாமல் மாவட்டம் தோறும் வருகை தந்து விழிப்புணர்வு கலந்துரையாடலை நடாத்தி வருவது பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள் என்றார்.

இந்த நிகழ்வில் கல்முனை மற்றும் சம்மாந்துறை வலய பிரதி கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்வி பணிப்பாளர்கள் ,ஆரம்ப கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் 250 தரம் நான்கு கற்பிக்கும் ஆசிரியர்களும் கலந்து கொண்டார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :