வி.ரி.சகாதேவராஜா-
கன்னியா வெந்நீர் ஊற்று வளாகத்தில் அமைந்துள்ள சிவன் கோயில் பூட்டு போட்டு மூடப்பட்டு காணப்படுகிறது.
அந்த சிவன் கோயில் படிக்கட்டில் நாய் படுக்கிறது.
இந்த காட்சி அங்கு செல்லும் இந்துக்கள் மத்தியில் மிகுந்த கவலையை அளிக்கிறது.
அங்கு சென்று பொறுப்பாளரிடம் விசாரித்த பொழுது பூசாரி தான் பூட்டி இருக்கிறார் என்றும் கூடவே நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் அது பூட்டப்பட்டு காணப்படுவதாகவும் கூறினார் .
சுற்றுலா செல்லும் இந்துக்கள் பூட்டிய கோயிலுக்கு வெளியே நின்று சிவனை வழிபட்டு வருவதனை காணக் கூடியதாக இருக்கிறது.
சூழலும் அசுத்தமாக காணப்படுகின்றது.
0 comments :
Post a Comment