தீகவாபி வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடிக் கட்டிடம் இன்று கையளிப்பு.


நூருல் ஹுதா உமர்-

லக வங்கியின் நிதியுதவியில் PSSP திட்டத்தின் ஊடாக தீகவாபிய பிரதேச வைத்தியசாலையில் சகல வசதிகளையும் கொண்ட இரண்டு மாடிக் கட்டிடமொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

வெளிநோயாளர் மற்றும் கிளினிக் பிரிவுகளைக்கொண்டு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட குறித்த கட்டிடத்தினை பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வு இன்று (03) தீகவாபிய பிரதேச வைத்தியசாலையின் பிரதேச வைத்திய அதிகாரி தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கட்டிடத்தினை கையளித்தார்.

இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சகாதார சேவைகள் பணிமனை திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர், வைத்தியர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :