அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலுள்ள பிரதான வீதிகளில் அதிகரித்து வரும் கட்டாக்காலி மாடுகளின் தொல்லை.


அஸ்ஹர் இப்றாஹிம்-

ம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலுள்ள பிரதான வீதிகளில் கட்டாக்காலி மாடுகளின் தொல்லை தினசரி அதிகரித்த நிலையில் காணப்படுவதாக வாகன சாரதிகள் விஷனம் தெரிவிக்கின்றனர்.

கட்டாக்காலி மாடுகளின் தொல்லையால் தினசரி வீதி விபத்துக்கள் ஏற்படுவதுடன் சிலர் உயிரிழந்துள்ளதுடன் பலர் உபாதைகளுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன், அங்கவீனர்களாகவும் பலர் கஸ்டமான சூழ்நிலையில் வாழ்ந்தும் வருகின்றனர்.

பகலிலும் இரவிலும் கட்டாக்காலி மாடுகளின் தொல்லையினால் பலர் பலவழிகளிலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

பிரதேசங்களிலுள்ள உள்ளுராட்சி சபைகளினால் திடீரென சில முடிவுகள் கட்டாக்காலி மாட்டு உரிமையாளர்களுக்கெதிராக சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் சில குறிப்பிட்ட காலத்தின் பின்னர் பழைய நிலைமைக்கே அது திரும்புகின்றது.

கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்துவதற்கான நிதந்தரமான தீர்வொன்றை பெற்றுத் தருமாறு பிரதேச மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :