பலஸ்தீனின் காசாவில் இடம் பெறுகின்ற போர்க் குற்றங்கள், ஆயிரக்கணக்கான அப்பாவி குழந்தைகள் மற்றும் மக்களை கொன்று குவிப்பதை தடுப்பதில் உலகத் தோல்வியின் தாக்கங்களும் அதனுடன் உலகின் பிற பகுதிகளில் ஏற்பட்டுள்ள அழுத்தங்களும் தொடர்பான கலந்துரையாடல் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் நேற்று 15ஆம் திகதி தபலாக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
“பலஸ்தீன் விவகாரத்தில் உலகின் தோல்வியும்: கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களும்” எனும் தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக் கலந்துரையாடலில் இலங்கைக்கான பாலஸ்தீன தூதுவர் கலாநிதி சுஹைர் எம்.எச். செய்ட், இலங்கையின் ஜ.நா அலுவலக முன்னாள் தேசிய தகவல் அதிகாரி மொஹான் சமரநாயக்க, சமூக ஆர்வலர் எம்.என் முஹம்மட் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.
இங்கு உரையாற்றிய பலஸ்தீன துாதுவர் உரையாற்றுகையில்
கடைசி பலஸ்தீனன் இருக்கும் வரை எங்களது நிஜ பூமிக்காகவும், எமது உரிமைக்காகவும் நாம் போராடுவோம். சர்வதேச நாடுகளுக்கும், இவ் உலகில் வாழும் சகல சமூகத்தினருக்கும் பாலஸ்தீன தேசம் பற்றிய உண்மையை சாதாரண மக்களும் தெரிந்து வைத்துள்ளார்கள். கடந்த 40 நாட்களுக்குள் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் , நோயாளிகள் வைத்தியம் பெருகின்ற வைத்தியசாலையை கூட இஸ்ரேல் அழித்து வருகின்றனர். இதை உலகில் உள்ள எந்த நாடோ இவ் காட்டுமிராண்டிக் கொலைகளை அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் பலஸ்தீன் ஹாமாஸ் போன்ற தமது நிஜ பூமிக்காக போராடுபவர்கள் ஒருபோதும் இவ்வாறானதொரு செயல்களை செய்ய மாட்டார்கள். குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள், வைத்தியசாலை எவ்வாறு பாதுகாப்பது . கவனிப்பது என்று எமது மதம் அழகாகச் சொல்லித் தந்துள்ளது. அவ்வாறு தான் ஹமாஸ் நடந்து கொள்கின்றனர்.. ஜ.நா. மனித உரிமை ஆணைக்குழு உள்ளது. சர்வதேச சமூகங்கள் இதனை பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றது. அவர்கள் அறிக்கைகள் ,கோரிக்கைகளை இஸ்ரேல் கவனத்திற்கு எடுக்கவில்லை. பழிக்காடாக்கும் அப்பாவிக் குழந்தைகள் வயோதிபர்கள் என்ன பாவம் செய்தார்கள் எனக் கேட்க விரும்புகிறேன். என அங்கு பலஸ்தீனத் துாதுவர் கலாநிதி செய்யட் உரையாற்றினார்கள்.
இங்கு உரையாற்றிய மொஹான் சமரநாயக்க - பலஸ்தீன் நாட்டுக்காக உலக நாடுகளில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் உலக நாடுகளில் நடைபெற்று வருகின்றன. நேற்று முன்தினம் இரண்டு லட்சம் முஸ்லிம்கள் லண்டனில் ஒன்று கூடி எதிர்ப்பினை வெளிப்படுத்தினார்கள். கடந்த காலங்களில் இலங்கையில் பாரிய ஆர்ப்பாட்டங்களை நாங்கள் நடத்தினோம். தற்போது எமது நாட்டில் பாரிய அளவில் அவ்வாறான எதிர்ப்பு பேரணிகளை எமது இளைஞர்கள் நடத்துவதை காண முடியவில்லை. நேற்று முன்தினம் பாராளுமன்ற உறுப்பினர்கள் 159 பேர் கையொப்பமிட்டு ஜக்கிய நாடுகள் கொழும்பு காரியாலயத்தில் குளிப்பதை நாம் ஊடகங்களில் அவதானித்தோம். பலஸ்தீன் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் பெருமளவில் அங்கு கொலை செய்யப்பட்டுள்ளார்கள். நேற்று முன்தினம் கூட அல் ஜசீரா தொலைக்காட்சியில் காசாவில் வைத்தியசாலையில் பிறந்த சிசுக்கள் உரிய வெப்பம், மின்சார வசதிகளின்றி வைத்தியசாலைக்குள் 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்துள்ள செய்தியை அவதானித்தேன். அத்துடன் காசாவில் மழை பெய்துள்ளது. அங்கு கூடாரங்களை அடித்துக் கொண்டு வாழ் பாலஸ்தீன அகதிகள் படும் துண்பங்களையும் ஊடகங்கள் ஊடாக காணக்கூடியதாக உள்ளது எனவும் மொஹான் சமரநாய்கக அங்கு உரையாற்றினார் .
என்.எம். முஹம்மட் இங்கு உரையாற்றுகையில் .
முன்னாள் ஜனாதிபதி , ஆர்.பிரேமதாசா காலத்தில் இலங்கையில் இஸ்ரேவேல் தூதரக ஆலயம் திறப்பதற்கு அனுமதி அளிக்கவில்லை... ஜேர்மனியில் இரண்டாம் மகா யுத்தம் நடைபெறும் போது கூட ஓர் யுத்த ஒழுக்க விழுமியங்கள் இருந்தன. குழந்தைகள், வயோதிபர்கள், மத ஸ்தாபனங்கள் மீது யுத்தம் செய்யவில்லை. ஆனால் இஸ்ரவேலர்கள் பலவந்தமாகவும் அமேரிக்கா, பிரித்தானியர்கள் ஆதரவுடன் பலஸ்தீன் நாட்டின் கருவருத்து ஆக்கிரமித்தார்கள். அவர்கள் சகல பொருளாதாரமும் அமெரிக்காவில் உள்ளது. அமெரிக்கா அரபு நாடுகளின் 25 வீதமான பெட்ரோலுக்காக அரபு நாடுகளை பிரித்து ஆள்ந்து வருகின்றன. இந்த அரபு நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து ஒர் அனியில் நிற்குமானால் இந்த இஸ்ரவேலர்களின் அடாவடி தனத்திற்கு ஓர் முற்றுப்புள்ளி வைக்க முடியும். ஜக்கிய நாடுகள் செயலாளர் கூட ஒரு அதிகாரம் இல்லாத ஒர் சபையாக உள்ளது. அது மட்டுமல்ல காசாவில் வைத்தியசாலைகள் குழந்தைகள் கொலைசெய்து வைத்தியசாலைகளை அழிவுக்கும் உலக சுகாதார ஸ்தாபனம் நிறுத்துமாறும் நிர்ப்பந்தங்கள் கோரிக்கைகளைக் கூட இஸ்ரோல் கணக்கில் எடுக்கவில்லை.
ஆகவே தான் இலங்கையராகிய நாம் வெளிநாட்டு அமைச்சு, பலஸ்தீன் துாதுவர் ஆலயத்தின் ஊடாக குறைந்தது நமது நாட்டின் தேயிலைப் பொதிகளை ரேந்ந்து அங்கு பலியாகும். மக்களுக்கு அன்பளிப்பு செய்வதற்கு நாம் நமது ஸ்தாபணங்கள் பொதுமக்கள் தயாரகுவோம் என சமூக செயற்பாட்டாளர் மொஹமட் வேண்டிக் கொண்டார்.
0 comments :
Post a Comment