கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி மாணவன் அர்மாஸ் சர்வதேச கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்று சாதனை!



அஸ்ஹர் இப்றாஹிம்-
சர்வதேச நிகழ்நிலை மூலமாக அமைதியான உலகிற்கு இளைஞர்களின் பங்களிப்பு எனும் ஆங்கில மொழி மூலமான கட்டுரைப் போட்டியில் கல்முனை ஸாஹிறா தேசிய கல்லூரி மாணவன் எம்.ரீ.எம்.அர்மாஸ் வெற்றிபெற்று வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளார்.

கல்முனை ஸாஹிறா தேசிய கல்லூரியில் தரம் 11-ல் கல்வி கற்கும் மாணவன் எம்.ரீ.எம்.அர்மாஸ் வரலாற்றுச் சாதனை படைத்து கல்லூரியின் புகழை மிளிர வைத்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் United Nations Association Coventry கிளையினால் நடத்தப்பட்ட சர்வதேச நிகழ்நிலை மூலமான கட்டுரை போட்டியில் "அமைதியான உலகிற்கு இளைஞர்களின் பங்களிப்பு" என்னும் துணைப் பொருளில் ஆங்கில மொழி மூலமான கட்டுரைப் போட்டியில் இம் மாணவன் சர்வதேச ரீதியில் 15-17 வயது பிரிவில் பங்கு பற்றி மூன்றாம் இடத்தினை பெற்று இச்சாதனையை படைத்துள்ளார்.

இம் மாணவனின் இச்சாதனைக்காக சர்வதேச தரத்திலான சான்றிதழும் ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான பண பரிசினையும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் United Nations Association Coventry கிளையினால் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

இம்மாணவனின் இச் சாதனைக்கு உறுதுணையாய் இருந்த அவரது பெற்றோருக்கும், இக்கல்லூரியின் முதல்வர் எம்.ஐ.ஜாபிர் அவர்களுக்கும், இணைபாடவிதானத்திற்கு பொறுப்பான பிரதி அதிபர் எம்.எச்.எம்.அபூபக்கர் அவர்களுக்கும் மற்றும் தரம் பதினொன்றின் பகுதி தலைவர் ரீ.கே.எம்.சாகிர் அவர்களுக்கும் ஏனைய வழிகளில் உதவி புரிந்த ஆசிரியர்கள் அனைவருக்கும் பாடசாலை சமூகம் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :