கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் அம் மாணவர்களுக்கு தரம் ஒன்று தொடக்கம் ஐந்து வரை கற்பித்த ஆசிரியர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு அப் பாடசாலையின் அதிபர் ஏ.எச்.அலி அக்பர் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் 163 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் வெட்டுப்புள்ளிக்கு அதிகமாக புள்ளி பெற்று 25 மாணவர்கள் சித்தி அடைந்துள்ளனர். 70 புள்ளிகளுக்கு அதிகமாக 148 மாணவர்கள் சித்தியடைந்து உள்ளதுடன் கல்முனை முஸ்லிம் கோட்டத்தில் இரண்டாவது தடவையாகவும் முதலிடம் பெற்றுள்ளது.
0 comments :
Post a Comment