எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்-
கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட ஓட்டமாவடி முதலாம் வட்டாரத்தைச்சேர்ந்த SMT ஹாஜியார் கொங்ரீட் வீதி சிறியளவிலான மழை பெய்தாலும் பாதை முடிவடையும் சந்தியில் மழை நீர் தேங்கி நிற்பதனால் பொதுமக்கள் அசெளகரியங்களை எதிர்கொள்வதாக விசனம் தெரிவிக்கின்றனர்.
அத்தோடு, குறித்த வீதியில் கழிவு நீர் தேங்கி நிற்பதன் காரணமாக பெரும் இடையூறு ஏற்படுவதுடன், இவ்வீதியில் பயணம் செய்யும் பாடசாலை மாணவர்கள் முதல் பொதுமக்கள் வரை தொடர் இன்னல்களைச் சந்திக்க நேர்கின்றது.
குறிப்பாக, அப்பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதாலும் மழைக்காலத்தில் மழை நீர் வழிந்தோட முடியாமல் தேங்கி நிற்பதனாலும் குறிப்பிட்ட பகுதி மிகவும் மோசமடைந்துள்ளதுடன், நீரும் முழுமையாக அசுத்தமடைந்து காணப்படுகின்றது.
பல்வேறு அபிவிருத்திப்பணிகளை முன்னெடுத்து வரும் கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபை இப்பிரச்சனைக்கு நிரந்தரத்தீர்வினைப் பெற்றுத்தர வேண்டுமென பிரதேச மக்கள் வேண்டி நிற்கின்றனர்.
இவ்வீதியுடன் இணைந்ததாகக் காணப்படும் வீதியில் வடிகான் காணப்படுவதால் இந்நீரை வடிகானுக்குள் வழிந்தோடச்செய்வதன் மூலம் இப்பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இப்பிரச்சனையைத்தீர்க்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.
0 comments :
Post a Comment