கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் மூலம் கல்முனை அல்-பஹ்றியா பாடசாலைக்கு ஏ.ஆர்.மன்சூர் நவீன வகுப்பறை திறப்பு விழாவும், திறன் பலகை வழங்கிவைப்பு.




எம்.எம்.றம்ஸீன்-

ல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட அல்-பஹ்றியா தேசிய பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம்.பைசலின் வேண்டுகோளுக்கிணங்க பாடசாலைக்கான ”திறன் பலகை” (Smart Board) கல்முனை ரஹ்மத் பவுண்டேசனினால் வழங்கி வைக்கப்பட்டது.

கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற மாணவர்களின் நலன்கருதி நவீன கற்பித்தல் முறையின் அடுத்த கட்ட வளர்ச்சியாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சரும், தனது நேசமிகு தந்தையுமான மர்ஹூம் “ஏ.ஆர்.மன்சூர்” அவர்களின் பெயரில் புதிய நவீன வகுப்பறையுடன் கூடிய திறன் பலகைக் கல்வி (Smart Board Education) மாணவர்கள் பாவனைக்காக திறந்து கையளித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வின் ஓர் அங்கமாக தரம் 1-5 வரையான வகுப்புகளில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களும், மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சான்றிதழ்களும் அதிதிகளினால் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹுதுல் நஜீம் அவர்களும், கெளரவ அதிதியாக கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூர் அவர்களும், விசேட அதிதிகளான பிரதி அதிபர்கள் எம்.ஏ.சலாம் மற்றும் திருமதி ஈ.றினோஸ் ஹஜ்மீன் அவர்களும்,பாடசாலையின் பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்களான எஸ்.ரீ.எம்.பஸ்வாக் மற்றும் எம்.எஸ்.எம்.பழீல் (12 ஆம் வட்டார ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர்), பழய மாணவர் சங்கச் செயலாளர் சட்டத்தரணி எம்.ஐ.எம்.ஜிப்ரி, பாடசாலையின் முன்னாள் பிரதி அதிபரும் றியாலுல் ஜன்னாஹ் பாடசாலையின் தற்போதைய அதிபருமான எம்.ஏ.அஸ்தார், ரஹ்மத் பவுண்டேசன் உறுப்பினர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், நலன் விரும்பிகள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :