நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பொறியில் பீட அணி களத்தடுப்பை தேர்ந்தெடுக்க நூலக அணி முதலில் துடுப்பெடுத்தாட தொடங்கியது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ஹலீம் மற்றும் பரீஸ் ஆகியோரின் இணைப்பாட்டங்கள் கூடுதலான ஓட்டங்களை குவித்திருந்த வேளையில் ஹலீம் 31 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
இதனை அடுத்து பரீஸுடன் இணைந்த ராகவன் ஆட்டமிழக்காமல் 42 ஓட்டங்களையும் பரீஸ் ஆட்டமிழக்காமல்47 ஓட்டங்களையும் பெற்று நூலக அணியானது 8 ஓவர்கள் நிறைவிலே 129 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
இந்த 129 என்ற இலக்கானது இதுவரையில் நடைபெற்ற போட்டியில் அதி கூடிய ஓட்டங்களாக பதிவாகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
130 என்கின்ற இலக்கினை நோக்கி துடிப்படுத்திய பொறியியல் பீட அணியினர் 76 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டு சகல ஓவர்களையும் நிறைவு செய்தனர்.
பந்துவீச்சிலே நூலக அணி சார்பாக ஆசாத் இரண்டு விக்கெட் களையும் ராகவன் மற்றும் ஹலீம் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தி நூலக அணிக்கு மேலும் வலுவை சேர்த்துக் கொண்டனர்.
இதன் அடிப்படையில் முதல் போட்டியிலே வெற்றி பெற்று தங்கள் தரவரிசையில் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது நூலக அணி.
0 comments :
Post a Comment