சாய்ந்தமருதில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் அனுசரணையில் மாற்று ஆற்றல் படைத்தோருக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு.


அஸ்ஹர் இப்றாஹிம்-

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் அனுசரணையில், சாய்ந்தமருது அல்-சுபைதா பவுண்டேஷன் ஏற்பாட்டில் மாற்று ஆற்றல் படைத்தோர் மற்றும் விஷேட தேவையுடைய 150 குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்வானது, இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் பாரூக் புக்ரி அவர்களினால், உதவி உயர்ஸ்தானிகர் திரு. பைசல் மற்றும் பாகிஸ்தான் உயஸ்தானிகராலயத்தின் இதர அலுவலகர்கள், முன்னாள் பிரதேச செயலாளரும் , தேர்தல்கள் மறுசீரமைப்பு ஆணையாளருமான ஏ.எல்.எம்.சலீம் , சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஷம்ஸ் தேசிய பாடசாலை அதிபர் றிப்கா அன்சார், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், நலன்விரும்பிகள் மற்றும் உதவி பெற தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகள் ஆகியோரின் பங்கு பற்றலுடன் சாய்ந்தமருது மழ்ஹரூஸ் ஷம்ஸ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வின் மூலம் வலது குறைந்த வறுமை கோட்டின் கீழ் வாழும் பெற்றோர்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :