அன்னமலை வைத்தியசாலையில் இரண்டு மாடிக்கட்டடம் கையளிப்பு.


நூருல் ஹுதா உமர்-

லக வங்கியினால் அமுல்படுத்தப்பட்டு வரும் PSSP செயற்றிட்டத்தின் கீழ் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் தெரிவு செய்யப்பட்டு நிதி பெறப்பட்ட அன்னமலை பிரதேச வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு மற்றும் ஏனைய சிகிச்சைகளுக்கான இரண்டு மாடிக்கட்டிடம் நேற்று 2023.11.04 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது

அன்னமலை பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம் றிபாஸ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் விசேடமாக முன்னாள் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரும் தற்போதைய மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருமான டாக்டர் ஜீ. சுகுணன் அவர்கள் கௌரவ அதிதியாகவும் கலந்து சிறப்பித்தார்

இந்நிகழ்வில் பணிமனையின் திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம் சீ எம் மாஹிர் அவர்கள் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டதுடன் ஏனைய சுகாதார உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்

பாரபட்சமின்றி முக்கிய சேவைகளை வழங்கி வரும் பணிமனையின் குழாத்தினரை அன்னமலை பிரதேச வைத்தி சாலையின் அபிவிருத்தி குழுவினரும் ஆலயத்தின் பிரதிநிதிகளும் ஊர் மக்களும் திரண்டு பிரம்மாண்டமான இந்நிகழ்வை ஒழுங்குபடுத்தி கௌரவித்தவுடன் நிகழ்வின் இறுதியாக மரங்களும் நட்டு வைக்கப்பட்டன
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :