அஸ்ஹர் இப்றாஹிம்-
காரைதீவு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட மாளிகைக்காடு மற்றும் காரைதீவு பிரதேசங்களில் முறையான வடிகான் வசதிகள் செய்யப்படாமல் போடப்பட்ட கொங்கிரீட் வீதிகளில் தேங்கி நிற்கும் நீரினால் பொதுமக்கள் பலவிதமான சுகாதார சீர்கேடுகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது.
வடிகான் வசதிகள் ஏற்படுத்தப்படாமல் கொங்கிரீட் வீதிகள் போடப்பட்டுள்ளதால் மழைநீர் வழிந்தோடாமப் பல நாட்களுக்கு வெள்ளநீர் தேங்கி நிற்பதால் பலவிதமான இடர்பாடுகளுக்கு பிரதேச மக்கள் முகம் கொடுக்க வேண்டியுள்ளதுடன், துர் நாற்றமும் வீசத்தொடங்கியுமுள்ளது.
மாளிகைக்காடு றியாழ் மர ஆலை வீதி, காரைதீவு விவேகானந்தா வீதி என்பன இந்த நிலையில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
0 comments :
Post a Comment