கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் 25 ஆவது ஆண்டு வெள்ளி விழா வேலைத்திட்டம் கழகத்தின் தலைவர் பொறியியலாளர் லயன்.எம்.சுதர்சன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
முதல் நிகழ்வாக, திருக்கோவில் பிரதேசத்தில் பின்தங்கிய காயத்ரி கிராமத்தில் ஐம்பது பேருக்கு 25சாறிகள் மற்றும் 25சாறன்கள் வழங்கப்பட்டன .
கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் வெள்ளிவிழா தலைவர் பொறியியலாளர் லயன். எம். சுதர்சன் தலைமையில் நேற்று முன்தினம்(25) சனிக்கிழமை நடைபெற்ற இந் நிகழ்வில் திருக்கோவில் உதவி பிரதேச செயலாளர் கந்தவனம் சதிசேகரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சபையின் பேரவைச் செயலாளர்
லயன் கலாநிதி எம். கோபாலரெத்தினம், சம்மாந்துறை வலய உதவிக்கல்விப் பணிப்பாளர் வீ.ரி. சகாதேவராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள் .
மேலும், கழக செயலாளர் லயன் எ.எல்.எம்.பாயிஸ், பொருளாளர் லயன் எம்.பரமேஸ்வரநாதன் உள்ளிட்ட நிர்வாகசபை உறுப்பினர்களும் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பொதிகளை வழங்கி வைத்தார்கள்.
காயத்ரி கிராமத்தின் கிராம சேவை உத்தியோகத்தர் எஸ்.சடாட்சரன் நன்றியுரை வழங்கினார்.
பின்னர் கஞ்சிகுடியாற்றில் மாதாந்த அமர்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment