கடினப்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் கல்முனை ஸாஹிறா தேசிய கல்லூரி அணி வெற்றி



நூருல் ஹுதா உமர்-
19 வயது கடினப்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் கல்முனை சாஹிரா தேசிய கல்லூரி அணியினர் 8 விக்கட்டுக்களால் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியை வீழ்த்தி இரண்டாம் சுற்றுக்குத் தெரிவானது.
மட்டக்களப்பு, கல்லடி சிவானந்தா கல்லூரி மைதானத்தில் (23) நடைபெற்ற இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சம்மேளனம் நடத்தும் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான (பிரிவு – 3) கடினப்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் கல்முனை சாஹிரா தேசிய கல்லூரி அணியும் மட்டக்களப்பு புனித மைக்கல் தேசிய கல்லூரி அணியும் கலந்து கொண்டன.

மட்டக்களப்பு, கல்லடி, சிவானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் இடம்பெற்ற மேற்படி போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி அணி 27 ஓவர்கள் முடிவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 92 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்குத்துடுப்படுத்தாடிய கல்முனை சாஹிரா தேசிய கல்லூரி அணி 17 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 93 ஒட்டங்களைப்பெற்று 8 விக்கட்டுக்களால் வெற்றி பெற்று இரண்டாம் சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வெற்றிக்காக உறுதுணையாய் இருந்த கல்லூரி அதிபர் எம்.ஐ.ஜாபிர், பயிற்சிகளை வழங்கிய பாடசாலை உடற்கல்வி ஆசிரியர் ஏ.எம்.அப்ராஜ் றிழா உட்பட இவ் வெற்றிக்காக ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கிய சிரேஷ்ட ஆசிரியர் கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் யு.எல்.எம்.ஹிலால் ஆகியோருக்கும் பாடசாலை சமூகம் நன்றிகளைத் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :