பாடசாலை வறுமை இடை விலகலை தவிர்க்கும் வகையில் வறுமைக் கோட்டிற்குட்பட்ட மாணவர்களுக்கு பொறியியலாளர் உதுமான்கண்டு நாபீர் அவர்களின் தனிப்பட்ட நிதியின் மூலம் நாபீர் பெளண்டேஷண் மகளிர் அமைப்பின் ஒழுங்குபடுத்தலில் சாய்ந்தமருது றியாலுல் ஜன்னா வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு பிரதேசத்திற்க்கு உற்பட்ட 18 கிராம சேவகர் பிரிவுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 180 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மாணவர்களின் பெற்றோரிடம் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரபல சமூக சேவையாளரும், தொழிலதிபரும், நாபீர் பவுண்டேஷன் ஸ்தாபகரும், பொறியியலாளருமான கலாநிதி உதுமான்கண்டு நாபீர் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தேடு கற்றல் உபகரணங்களையும் வழங்கி வைத்தார்.
0 comments :
Post a Comment