மருதமுனை அல்- மினன் வித்யாலயத்தில் விளையாட்டு விழா



ஏ.எல்.எம்.ஷினாஸ்-
ல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட மருதமுனை அல்- மினன் பாடசாலை முன்பள்ளி மாணவர்களின் வருட இறுதி விளையாட்டு விழா பாடசாலையின் அதிபர் திருமதி எஸ்.எச். எஸ்.ஹார்ஜத்து தலைமையில் பாடசாலை உள்ளக மைதானத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் சிக்னல் அரிசி ஆலைய நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரும் சமூக சேவையாளருமான எம்.எஸ்.எம். ஹாரிஸ் (நவாஸ்) பிரதம அதிதியாக
கலந்து கொண்டு விளையாட்டு விழாவினை ஆரம்பித்து வைத்தார். கௌரவ அதிதியாக இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியலாளரும் மருதமுனை மஸ்ஜிதுல் மினன் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை தலைவருமான எம்.எஸ் எம் பாஸில் கலந்து கொண்டதுடன் பாடசாலையின் அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு செயலாளர் ஆசிரியர் இசெட் .எம்.றியாஸ், அதிபர் சேவை போட்டி பரீட்சைக்கு தெரிவு செய்யப்பட்டிருந்த அதிபர் நிஹால் சாலி, பாடசாலையின் பழைய மாணவரும் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்திமான ஏ.எல்.எம் ஷினாஸ் உட்பட மாணவர்களின் பெற்றோர்கள், நலன் விரும்பிகள் என பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்

மாணவர்களின் உடற்பயிற்சி கண்காட்சி, எண் கணித பயிற்சி போட்டி உட்பட பாரம்பரிய கலை கலாசார பண்பாட்டு விழுமியங்களை வெளிப்படுத்தும் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் இடம் பெற்றன. மாணவர்களின் வினோத உடை கண்காட்சி பலரது பாராட்டையும் பெற்றிருந்தது.
விளையாட்டு விழா நிகழ்வின் இறுதியில் மாணவர்களுக்கு பதக்கம் அணிவிக்கப்பட்டு புத்தகப்பை அன்பளிப்பாக வழங்கப்பட்டதுடன் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :