கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல். எம். றிபாஸ் அவர்களின் வழிகாட்டலில் கல்முனை பிராந்திய தொற்று நோய் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம். ஏ. சி. எம். பஸால் அவர்களினால் கல்முனை பிராந்தியத்தில் கடமையாற்றும் நுளம்பு கட்டுப்பாட்டு கள உதவியாளர்களுக்கு டெங்கு பூச்சியல் தொடர்பான பயிற்சி கருத்தரங்கு காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் நடைபெற்றது
குறித்த நிகழ்வில் பங்குபற்றிய பங்குபற்றுனர்களுக்கு இன்று 2023.11.06 பணிமனையின் கேட்போர் கூடத்தில் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பணிமனையின் பிரதிப்பணிப்பாளர் டாக்டர் எஸ் ஆர் இஸ்ஸதீன், திட்டமிடல் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம் சீ எம் மாஹிர் அவர்களும் தொற்றுநோய் தடுப்பியலாளர் டாக்டர் எம்.ஏ.சி.எம்.பஸால் ஆகியோர் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.
0 comments :
Post a Comment