கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் மூலம் பாலமுனை ரமழான் கிராமத்துக்கு பொதுக்கிணறுகள் வழங்கிவைப்பு.





அஸ்ஹர் இப்றாஹிம்-

பாலமுனை உதுமாபுரம் “ரமழான் கிராமம்” எனும் பிரதேசத்தில் வசித்து வருகின்ற 18 குடும்பங்கள் அன்றாடம் தமது குடிநீர்த் தேவைக்காக தூரப் பிரதேசங்களுக்குச் சென்று தண்ணீர் குடங்களிலும், பாத்திரங்களில் மற்றும் வாளிகளிலும் நீரைக் கொண்டுவந்து தமது தேவைகளை நிறைவேற்றிய வண்ணம் இருந்தனர்.

இக்கிரமாம மக்களின் குடிநீர்ப்பிரச்சினையை நிவர்த்தி செய்யும் முகமாக பொதுக் கிணறுகள் அமைத்துத்தருமாறு ரஹ்மத் பவுண்டேசனிடம் பாலமுனை ஜனாஸா நலன்புரிச் சங்க பணிப்பாளரும், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாலமுனைக்கான மத்தியகுழு ஆலோசகருமான ஐ.பீ.எம்.ஜிப்ரி இக்கிராம மக்கள் சார்பாக கோரிக்கை விடுத்திருந்தார்.

விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக வை.எம்.எம்.ஏ.பேரவையின் ஒருங்கிணைப்பில்; கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் உத்தரவின்பேரில் மிகவும் குறுகிய நாட்களுக்குள் குறித்த பொதுக்கிணறுகள் கட்டி முடிக்கப்பட்டு அக்கிராம மக்களின் பாவனைக்காக திறந்து கையளித்து வைத்தார்.

இதன்போது பவுண்டேசன் உத்தியோகத்தர்கள், குறித்த பயனாளர்கள், பிரதேச மக்கள், நலன்விரும்பிகள் என பலர் கலந்துகொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :