கல்முனை கல்வி வலயத்துக்குட்பட்ட கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்துக்கு கணினி இயந்திரம் அன்பளிப்பு செய்யப்பட்டது.
பாடசாலையின் ஆரம்பப் பிரிவுக்கு நீண்ட காலம் நிலவிவந்த கணிணி தேவை கருதி,பஹ்றியன்ஸ் 2002 நலன்புரி அமைப்பிக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளை அடுத்து,கல்முனை பஹ்றியன்ஸ் 2002 நலன்புரி அமைப்பினரினால் பாடசாலையில் இன்று(06) இடம்பெற்ற காலை ஆராதனையில் வைத்து அதிபர் ஏ.ஜி.எம்.றிசாத் அவர்களிடம் அமைப்பின் சார்பாக எஸ்.என்.ஹஸ்மி,எஸ்.எல்.நாசிக்,ஏ.றியாஸ் ஆகியோர் கலந்து கொண்டு கணினி இயந்திரம் ஒன்றினை கையளித்தனர்.
இக் கணினித் தொகுதியைக் கையளித்த பஹ்றியன்ஸ் 2002 நலன்புரி அமைப்பினர்களுக்கு பாடசாலை சமூகம் சார்பாக பாடசாலை அதிபர் ஏ.ஜி.எம்.றிசாத் நன்றியினை தெரிவித்தார்.
மேலும் இதுபோன்ற இன்னும் பல தேவைகள் எமது பாடசாலையில் காணப்படுகின்றன.இவர்களைப் போன்ற தன்னார்வ அமைப்புக்கள்,பொது சேவை மேற்க்கொள்ளும் நிறுவனங்கள் எமது பாடசாலைக்கு உதவ முன்வரலாம் என்பதையும் பாடசாலை சமூகம் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
0 comments :
Post a Comment