சர்ஜுன் லாபீர்-
கல்முனை பிரதேசத்தில் பாடசாலை மட்டங்களில் சுனாமி அனர்த்த ஒத்திகை நிகழ்வுகளை நடத்துவதற்கு அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு ஏற்பாடுகளை செய்துள்ளது.அந்த வகையில் கல்முனை பிரதேசத்தில் கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயம் மற்றும் சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயம் ஆகிய இரு பாடசாலைகளும் முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்கிணங்க குறித்த பாடசாலைகளை உள்ளடக்கிய பிரதேச செயலக பிரிவில் கடமையாற்றும் அனர்த்த விடயங்களில் நேரடியக பங்குகொள்ளும் உத்தியோகத்தர்களை உள்ளடக்கிய பிரதேச மட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று(03) கல்முனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வுக்கு அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் எம்.ஏ.சி.எம் றியாஸினால் அனர்த்தம் சம்மந்தமான விழிப்புணர்வு இடம்பெற்றது.
மேலும் இந் நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ.முவஃபிக்கா, சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.எம் அஜ்வத் முப்படைகளின் பிரதிநிதிகள்,பாடசாலைகளின் அதிபர்கள்,கரையோரம் பேணும் உத்தியோகத்தர்கள்,அனர்த்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் என பல உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
UNDP மற்றும் SLRCS நிதியுதவியுடன் கல்முனை கல்வி வலயத்தில் மிகவும் பாதிக்கக்கூடிய மேற்படி இரு பாடசாலைகளுக்கான ஒத்திகை நிகழ்வு மிக விரைவில் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
0 comments :
Post a Comment