நூருல் ஹுதா உமர்-
கல்முனை கல்வி வலயத்தின் கல்முனை அல்- மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள், வெட்டுப் புள்ளிகளை அண்மித்த மாணவர்கள் மற்றும் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்த மாணவர்கள் அனைவரையும் கௌரவிக்கும் நிகழ்வு இன்று பிரதி அதிபர் எம்.ஆர்.எம். நௌஸாத் அவர்களின் நெறிப்படுத்தலில் பாடசாலையின் அதிபர் எம்.ஐ. அப்துல் ரஸாக் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சித்தியடைந்த மாணவர்கள் அனைவரும் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டது டன் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற டீ, மர்யம் ரஹா- 168, ஏ.பி. எம்.நாசித்- 162, எம்.எப். பாத்திமா சாரா- 150, கே.எம். ஹம்தூன்-148 ஆகிய மாணவர்களுக்கு பாடசாலையின் பழைய மாணவரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும், இலங்கை உதைப்பந்தாட் சம்மேளனத்தின் முன்னாள் பிரதி பொதுச் செயலாளரும், அம்பாறை மாவட்ட உதைப்பந்தாட்ட லீக்கின் பொதுச் செயலாளரும், கல்முனை சனிமௌன்ட் விளையாட்டு கழகத்தின் பொதுச் செயலாளருமான எம்.ஐ.எம். அப்துல் மனாஃப் அவர்களின் அனுசரனையில் விசேட பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் இம் மாணவர்களுக்கு தரம் 01 முதல் தரம் 05 வரை கற்பித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் மிகவும் திறன்பட ஆசிரியர்களை வழிப்படுத்தி, மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு தன்னை முழுமையாக அர்ப்பணித்த ஆரம்ப பிரிவு பகுதித் தலைவர் ஏ.எம். ஜூனைதீன் ஆசிரியர் அவர்களுக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்திய பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் பாடசாலையின் அதிபர் அவர்கள் இந்நிகழ்வின் போது நன்றி பாராட்டி வாழ்த்துக்களையும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment