எம்.எம்.றம்ஸீன் -
முதியோர் தேசிய செயலகத்தின்
நிதி ஒதுக்கீட்டின் கீழ் அட்டாளைச்சேனை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட 32 கிராம சேவை பிரிவுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட சிரேஸ்ட பிரஜைகள் 20 பேருக்கு கட்டில் மெத்தை, காற்று மெத்தை, மலசலகசட உபகரணங்கள் என்பன உதவி பிரதேச செயலாளர் நஹிஜா முஸாபிர் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கணக்காளர் ஏ.எல்.எம்.றிபாஸ், நிருவாக உத்தியோகத்தர் ஏ.பி.சலீம், கிராம நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எல்.ஜஃபர், சமூக சேவைகள் உத்தியோகத்தர் ஏ.ஜீ.எம்.அர்ஸாத்,
சமூக சேவைகள் பிரிவின் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் ஏ.பி.ஹாஸீம், முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்
எம்.ஏ.எம்.ஹைஸ் மற்றும் ஏனைய அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment