எஸ்.எம்.எம்.முர்ஷித்-
அரசாங்கத்தினால் முதியோர்களை கௌரவிக்கும் நோக்கில் தங்களது வீடுகளில் வாழ்வதற்கு தேவையான குறைந்தபட்ச வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைய பல்வேறு வேலைத்திட்டங்கள் பிரதேச செயலகம் தோறும் இடம் பெற்று வருகின்றது.
அந்த வகையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவராஜாவின் வழிகாட்டலில் பிரதேச செலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட அறுபது வயதுக்கு மேற்பட்ட பத்து பயனாளிகளுக்கு கட்டில், மெத்தை, சாய்மனைகதிரை, தலையனை போன்ற பொருட்களை கையளிக்கும் நிகழ்வு பிரதேச செயலக பழைய கட்டிடத்தில் இன்று இடம் பெற்றது.
ஓட்டமாவடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எஸ்.எம்.அல் அமீன், நிருவாக உத்தியோகத்தர் எஸ்.அப்துல் றஹீம், சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.ஏ.சி நஜிமுதீன், சமூக சேவை பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு பயனாளிகளுக்கான பொருட்களை கையளித்தனர்.
முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் நிதி அனுசரணையில் முதியோர் தங்களது வீடுகளில் வாழ்வதற்கு தேவையான குறைந்தபட்ச வசதிகள் மற்றும் சுகாதார பொருட்களை வழங்குதல் நிகழ்ச்சித் திட்டத்தில் இவ் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டதாக ஓட்டமாவடி பிரதேச செயலக சமுக சேவை உத்தியோகத்தர் எஸ்.ஏ.சி. நஜிமுதீன் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment