அஸ்ஹர் இப்றாஹிம்-
தம்பட்டை இலவன் ஸ்டார் விளையாட்டுக் கழகம் நடத்திய அணிக்கு 11 பேர் கொண்ட மட்டுப்படுத்தப்பட்ட 48 கழகங்கள் உள்ளடக்கிய கிறிக்கட் சுற்றுப் போட்டியில் இறுதிப்போட்டியில் விநாயபுரம், விநாயகர் விளையாட்டு கழக அணியினரை வீழ்த்தி அக்கரைப்பற்று சம்பியன் விளையாட்டுக்கழகம் சம்பியனானது.
அக்கரைப்பற்று சம்பியன் விளையாட்டுக்கழகம் காலிறுதிப் போட்டியில் திருக்கோவில் எதிரொலி விளையாட்டுக்கழகத்தையும், அரையிறுதிப் போட்டியில் தம்பட்டை இலவன் ஸ்டார் விளையாட்டுக்கழகத்தையும் ,இறுதிப் போட்டியில் விநாயகபுரம், விநாயகர் விளையாட்டுக்கழகத்தையும் வெற்றி கொண்டு சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டதுடன்,40,000 ரூபாய் பணப்பரிசையும் பெற்றுக் கொண்டனர்.
இப்போட்டியில் சிறப்பாட்டக்காரராக அக்கரைப்பற்று சம்பியன் விளையாட்டுக்கழக வீரர் அலெக்ஸ் சுஜீ தெரிவு செய்யப்பட்டார்.
0 comments :
Post a Comment