அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களின் பிள்ளைகளுக்கு வீட்டுரிமை மாற்றும் திட்டம்!

முனீரா அபூபக்கர்-

>அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் உண்மையான உரிமையாளர்களின் பிள்ளைகளுக்கு வீட்டுரிமைகளை மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு அமைச்சர் பிரசன்ன அமைச்சு அதிகாரிகளுக்கு பணிப்புரை...


 >பொரளை ஓவல் வியூ ரெசிடென்சீஸ் (Oval View Residences) வீடமைப்புத் திட்டத்தில் உள்ள வீட்டு அலகுகளின் உண்மையான உரிமையாளர்களின் பிள்ளைகளுக்கு வீட்டுரிமையை நேரடியாக மாற்றுவதற்கான அனுமதி கோரும் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பு...


*அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

அடுக்கு மாடிக் குடியிருப்பில் வசிக்கும் உண்மையான உரிமையாளர்களின் பிள்ளைகளுக்கு வீட்டுரிமையை மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அமைச்சு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

இவ்வாறான கோரிக்கைகள் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கும் அமைச்சின் மக்கள் தினத்தன்றும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, பொரளை, ஓவல் வியூ ரெசிடென்சீஸ் வீடமைப்புத் திட்டத்தின் வீட்டு அலகுகளை உண்மையான உரிமையாளர்களின் பிள்ளைகளுக்கு நேரடியாக மாற்றுவதற்கு அனுமதி கோரி அமைச்சரவையில் அமைச்சரவை பத்திரம் ஒன்றை அமைச்சர் சமர்ப்பித்துள்ளார்.

பொரளை, ஓவல் வியூ ரெசிடென்சீஸ் வீடமைப்புத் திட்டம் என்பது அரச ஊழியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக நகர அபிவிருத்தி அதிகாரசபையால் ஆரம்பிக்கப்பட்ட நடுத்தர வருமான வீட்டுத் திட்டமாகும். நவீன வசதிகளுடன் கூடிய 24 அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்டுள்ளது. இந்த வீட்டுத் தொகுதியில் 608 குடியிருப்புகள் மற்றும் 5 வணிக அலகுகள் உள்ளன.

அதன்படி, வீட்டிற்குரிய முழுப் பெறுமதி மற்றும் தண்டப் பணத்தைச் செலுத்தி முடித்த கொள்வனவாளர்கள் 247 பேருக்கு இந்த வீட்டுத் திட்டத்தின் வீட்டுரிமையை வழங்குதல் என்ற அடிப்படையில் இந்த வீடுகள் விடுவிக்கப்படும்.

உண்மையான உரிமையாளர் உயிருடன் இருக்கும் போது அவர் இந்த வீடு தொடர்பாக வங்கிக் கடன் பெறவில்லை என்றால், வீட்டின் உரிமையை நேரடியாக உரிமையாளரின் பிள்ளைகளுக்கு மாற்றுவதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டுமென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :