மல்வத்தையில் ஆயுள்வேத வைத்தியசாலை ஆளுநரால் திறந்து வைப்பு.


வி.ரி.சகாதேவராஜா-

ல்வத்தையில் ஆயுள்வேத வைத்தியசாலை நேற்று முன்தினம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

மாகாண சுகாதார அமைச்சு மற்றும் மாகாண ஆயுள்வேத திணைக்களம் ஏறக்குறைய 14,000,000. (ஒருகோடி நாட்பது லட்சம்) ரூபாவை ஒதுக்கீடு செய்து மல்வத்தை ஆயுர்வேத மத்திய மருந்தகம் அமைக்கப்பட்டது.

கடந்த சனிக்கிழமை இம் மருந்தகம் ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.முரளீதரன் தலைமையில் இத்திறப்பு விழா இடம்பெற்றது.

முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை உப தவிசாளரும் சு.கட்சி அமைப்பாளருமான வெ.ஜெயச்சந்திரன் மல்வத்தை மக்கள் ஒன்றிய தலைவர் பொன்.நடராஜா உள்ளிட்ட பல பிரமுகர்களும் கலந்து கொண்டார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :